Breaking
Thu. Dec 11th, 2025
வரிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பெட்டி , மண்வெட்டி மற்றும் GPS வழங்கும் நிகழ்வு இன்று (13) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில் கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலந்து கொண்டனர்.
மீனவர்களுக்கான மீன் பெட்டிகள், மண்வெட்டிகள், பால் குவளை மற்றும் GPS ஆகிய உபகரணங்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான லோகநாதன் , தெளபீக் , கிராம சேவையாளர்கள் அமானுல்லாஹ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார அமைப்பாளரான சம்மூன், மஹ்றுப்,பைறூஸ், மன்சூர், சர்ஜூன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Related Post