Breaking
Wed. Dec 10th, 2025

கடந்த சில தினங்களாக புத்தளம் நகர் பகுதியில் பகல் பொழுதுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எமது புனித ரமழான் மாதத்தில் எம்மக்களுக்கு மிகுத்த அசௌகரியத்தை அளித்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 21 ம் திகதி தொடக்கம் 30 ம் திகதிக்கு இடைப்பட்ட சில நாட்களிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

புனித நோன்பு பெருநாள் காலப்பகுதியில் இது எமது மக்களை சிரமப்படுத்தும் என்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் புத்தளம் மாவட்ட மின்சார சபை பிரதி பொது முகாமையாளருடன் இது தொடர்பாக பேசி இம்மாதம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதை இடைநிறுத்தியுள்ளார்.

:- இன்று (19-06-2017) மாத்திரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

Related Post