Breaking
Sun. Dec 14th, 2025

புதிய முறைமையின் கீழ், அடுத்தாண்டு நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் ஆசிரியர்களை தெளிவுபடுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ்  பரீட்சை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாப்பத்திரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு பரீட்சை தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஒரு வினாப் பத்திரமே வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர்கள், தெளிவுபடுத்த திட்டம், தொடர்பில், ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Post