Breaking
Wed. Dec 17th, 2025

அன்மைக்காலமாக கல்குடாத் தொகுதியில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் மற்றும் கொலைச் சம்பவங்களை கண்டித்தும், மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வேண்டி, வாழைச்சேனை பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன.

குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், அண்மையில் இப்பிரதேசத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்துவதாக மக்கள் சந்தேகம் கொள்வதனால், போலிஸ் தரப்பு நீதமான முறையில் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரியும், பெண்கள் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக்கோரியும் இவ்வமைதிப் பேரணி நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது பள்ளிவாசல் தர்ம கர்த்தாக்கள், ஜுனைட் நளீமி மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு மகஜர்களை வாழைச்சேனை பிரிவுக்குற்பட்ட உதவி போலிஸ் அத்தியட்சகர் மற்றும் வாழைச்சேனை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கையளித்தனர்.

Related Post