Breaking
Thu. Dec 11th, 2025
பிரசித்தமான மியன்மார் இணையத்தளம் ஒன்று நேற்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இராவட்டி என்ற இந்த இணையத்தளம் பிரசுரித்திருந்த தலைப்புக் காரணமாகவே அதன்மீது ஊடுருவல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த இணையத்தளத்தில் இலங்கைக்கு சென்றிருந்த பௌத்த பிக்குவான விராது தேரரும் இலங்கையின் பொதுபல சேனாவும் சந்திப்பு நடத்திய செய்தியில் இனவாதம் என்ற தலைப்பு இடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இராவட்டி இணையத்தளம் முஸ்லிம்களுக்கு சார்பானது என்றும், அது முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதாகவும் ஊடுருவலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related Post