Breaking
Sat. Dec 13th, 2025

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்றுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் வழங்கும் விடயத்தில் தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்த மங்கள சமரவீர தற்போது லண்டன் சென்றுள்ள நிலையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் பல அமைச்சர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி கேட்ட போது அப்படி எந்த விசேடங்களும் இல்லை என தெரிவித்தனர் என்று லங்கா சீ நியுஸ் என்ற இணையம் தெரிவித்துள்ளது.

( லங்கா சீ நியுஸ்)

Related Post