Breaking
Fri. Dec 19th, 2025
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கும் பொருட்டு G-20 (Group 20) எனும் புதிய அணியொன்றை உருவாக்கியுள்ளது.
அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் தலைமைத்துவச் சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கரு ஜெயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, தலதா அதுகோரள, ஜோசப் மைக்கல் பெரேரா, பாலித ரங்க பண்டார, ஜோன் அமரதுங்க மற்றும் ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரும் இவ்வணியில் உள்ளடங்குகின்றனர்.
ஏற்கனவே இருமுறை கூடியுள்ள இவ்வணி, நாளை 17ஆம் திகதி கட்சி தலைமையகத்தில் மீண்டும் கூடி தேர்தல் கள நிலவரங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஐ.தே.கவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Post