Breaking
Sun. Dec 7th, 2025

நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் அடையாளத்தை உறுதி செய்து அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு. ராஜபக்ச விரோத சக்திகளை ஒன்று திரட்டி ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம்.

ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் விவசாயிகள், இளைஞர் யுவதிகள், மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என சமூகத்தின் பல்வேறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் அத்துடன் புதிய அரசாங்கமொன்றின் கீழ் மக்களுக்கு நன்மைகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post