Breaking
Thu. Dec 11th, 2025

JM.Hafeez

வேன் ஒன்று ஆற்றில் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்கள் ஸ்தலத்தில்  பலியாகி உள்ளனர்.
கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் பிங்காஓயாவில் வேன் ஒன்று விழுந்தே இவ்வாறு மூவர் உயிரிழந்துள்ளனர்.
(3.10.2014) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தை செர்ந்த மூவராகும். அவர்கள் மொஹமட்  யூசுப், மொஹமட் பாரூக், பாத்திமா மிசிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டகளப்பு, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சென்று வீட திரும்பும் வழியில்  அதிகாலை 4 மணி அளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலீஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .
இவ் விபத்துக்கு காரணம் இது வரை தெரிவவர வில்லை. இருப்பினும் சாரதி திடீர் நித்திரைக்குள்hளாகி இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.
மேற்படி சடலங்கள் தற்போது கட்டுகஸ்Nதோட்டை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

Related Post