Breaking
Sun. Dec 14th, 2025

கடந்த வாரத் தொடர்ச்சியாக, மன்னாருக்கு இன்று காலை (05) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.

அந்தவகையில், சிலாவத்துறை, தம்பட்டை முசலிக்கட்டு, கொக்குபடையான், கூலாங்குளம், முசலி, அகத்திமுறிப்பு, புதுவெளி, வேப்பங்குளம், பொற்கேணி, பிச்சவாணிப நெடுங்குளம், பொற்கேணி அளக்கட்டு, அகத்திமுறிப்பு அளக்கட்டு  மற்றும் 4 ஆம் கட்டை ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்திருந்த தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, அப்பிரதேச மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.  

அத்துடன், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்ட தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த மக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.


 

Related Post