Breaking
Mon. Dec 8th, 2025

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் தின விழாவிற்காக 10 ரூபாய் பணம் கேட்ட 11 வயது மாணவியை அவரது தந்தை வழி மாமா அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாகேப்கஞ்சில் உள்ள பிந்துதாம் நடுநிலை பள்ளியில் படிக்கும் காஜல் குமாரி என்ற அப்பெண் தனது பாட்டியிடம் ஆசிரியர் தினத்திற்கான தபால் தலை வாங்க பத்து ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பாட்டியின் அருகில் இருந்த அப்பெண்ணின் தந்தை வழி மாமா அவளது தலையை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் இறந்துவிட்டதாக ரங்கா காவல் நிலைய ஆய்வாளரான அனில் குமார் கூறியுள்ளார். அப்பெண் மீது அவளின் மாமா தாக்குதல் நடத்தியபோது, கார்பெண்டரான அவளின் தந்தை ஓம் பிரகாஷ் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

நாட்டில் சிறுமிகளை கூட கொல்லும் சிறு புத்திக்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post