துருக்கி இலங்கையின்முக்கிய பங்காளர். இலங்கைக்கும்துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவதுஅமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும் துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான விசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர். அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட தமது இராஜதந்திர உறவுகளை 68 ஆண்டுகளாகஅனுபவித்து வருகின்றனர். Read More …