Breaking
Fri. Dec 5th, 2025

மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்பு செயலாளர் நேற்றுக் காலை மல்வத்து பீடாதிபதியைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினுள் வன்முறை நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்களை எதிர்த்துப் போராடுவதே தனது பிரதான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் கடல்வழியாக இடம்பெறுகின்ற சட்ட விரோத செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post