Breaking
Sat. Dec 6th, 2025

தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரம் சிறுகடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நந்திக்கடல், இரட்டை வாய்க்கால், புதுமாத்தளன் ஆறு, சாலைக்கடல், கொக்கிளாய் ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் வற்றிக் காணப்படுவதால் குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post