Breaking
Mon. Dec 15th, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைகள் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்ற மெதுவும் இல்லை எனத் தெரிவித் துள்ள இலங்கை அரசு, மனித உரி மைப் பாதுகாவலர்கள் பழிவாங்கப்படு கின்றனர் என வெளியான குற்றச் சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 27 ஆவது அமர்வில் உரையாற்றிய தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள் ளார்.
புதிய ஆணையாளர் நியமனத்தை வரவேற்றுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சுகளை மேற்கொண் டுள்ளது. எனினும், சர்வதேச விசார ணையைக் கோரும் மார்ச் மாத பிரே ரணையை நிராகரிக்கின்றது. யுத்த கால கரிசனைகள் குறித்த விடயங்க ளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசு தொடர்ந்தும் உள்ளூர் பொறிமுறை களைப் பயன்படுத்தும்.

சாட்சி பாதுகாப்பு தொடர்பான சட்ட மூலம் திங்கட்கிழமை நாடாளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் அதன் ஆணையை மீறுவதுடன் உள்ளூர் பொறிமுறையை முற்றுமுழுதாக மதிக்காததாக காணப்படுகின்றது. நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். (0u)

Related Post