Breaking
Thu. Dec 11th, 2025

 பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் தரித்து நிற்கவுள்ளது.பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post