Breaking
Fri. Dec 19th, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் செயற்திட்ட குழு இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்  மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவால் செயற்திட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் 20 பேர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் செயற்படவேண்டிய விதம் குறித்து இக்குழு திட்டம் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post