Breaking
Thu. Dec 11th, 2025

யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பண நிகழ்வு இன்று (10) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பத்தியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர், ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாக செயலாளர் ஹனீபா, இறாகாம பிரதேச செயலக செயலாளர் நஸீர் , நிந்தாவூர் பிரதேச செயலக செயலாளர் திருமதி றிபா ஜெமீல் , கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன், கல்முனை நகர சபை முன்னாள் உறுப்பினர் முபீத், கல்முனை தொகுதி அமைப்பாளர் ARMஜிப்ரி , கலீல் றகுமான் , பேஸ்டர் றியாஸ் , இக்பால் , அமைச்சியின் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related Post