Breaking
Thu. Dec 11th, 2025

டெல்லியில் புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சத்தை  இழப்பீடாக  வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் தவறி விழுந்த இளைஞரை, புலி தாக்கியதில் பலியானார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது .

இந்நிலையில், புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சத்தை  இழப்பீடாக  வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி டெல்லி  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி உயிரியல் பூங்கா நிர்வாகத்துக்கும் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Related Post