Breaking
Wed. Dec 10th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ், கொழும்பு 15, மட்டக்குளி சமித்புர ஸ்ரீ விக்கிரமபுர பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளை ஆராயும் நோக்கில், நேற்று (10) அங்கு விஜயம் செய்ததுடன், அப்பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தப் பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதார தேவைகள் குறித்தும்  கேட்டறிந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், விரைவில் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

(ன)

 

 

Related Post