Breaking
Sat. Dec 6th, 2025

தமிழ் தேசிய கூட்டணி, எல் டி டி ஈ அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்தது பெரிய தவறாகும் . இவர்களிடையே இன்னும் தீவிரவாதம் இருக்கிறது

இவை தீவிரவாத கருத்துக்கள் கொண்ட கட்சிகளாகும்   இக்கட்சிகளை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்ததே பெரிய தவறாகும். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் அரசியல் வன்முறை மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தின் தலைவரான பேராசிரியர் ரொஹான் குணவர்தன தெரிவித்தார்.

இவர்கள் தீவிரவாதத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த அரசியல் வாதிகள் மக்கள் மனங்களில் தொடர்ந்தும் தீவிரவாதத்தையே புகுத்துகின்றனர். இது எதிர்காலத்தில் மீண்டும் பாரிய விளைவை ஏற்படுத்தலாம். எனவே தான். தீவிரவாதத்தை ஆதரிப்போரை பாராளுமன்றம் செல்ல விடுவது தவறு என்று நான் கூறுகிறேன். பிரான்ஸ் அரச சட்டங்களை இங்கு அமுல் நடத்துவது குறித்து அரசு ஆராய வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டணியினர் எப்போதும் தமிழ் மக்களையே பார்க்கின்றனர். முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம்களை பார்க்கின்றனர் பொது பல சேனாவும் அவ்வாறே செயல்படுகின்றது. இது ஒரு புற்று நோயாகும். நாம் அனைவரும் இலங்கையர் என்றே நோக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் நாட்டில் எவ்வித பிரச்சினையுமில்லை .

.இலங்கை சீனாவுடன் பொருளாதார நட்புறவுகளை வளர்த்து வருகின்றது. அவ்வாறே இலங்கை இந்தியாவுடனும் தமிழ்நாடுடனும் நெருங்கிய பொருளாதார நடட்புறவுகளை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Post