அஸ்ரப் நகர் கமு/ அல் – அக்ஷா வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு!

அஸ்ரப் நகர் கமு/ அல் – அக்ஷா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (03) இடம்பெற்றது.

அதிபர் ஏ.ஐ.முக்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன் போது, உரையாற்றிய தவிசாளர் தாஹிர்,
இந்த அஸ்ரப் நகர் கிராமமானது, நகர் பிரதேசத்திலிருந்து மிகவும் தூரமாக காணப்படுவதனால், இப்பிரதேசத்து மாணவர்களை இது போன்ற நிகழ்வுகளில் கெளரவபடுத்துவதனூடாக, அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தினை தூண்ட முடியுமென தெரிவித்திருந்தார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடாகியிருந்ததுடன், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது.