Breaking
Sat. Jul 27th, 2024

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென விண்ணப்பித்த 11 ஆயிரத்து 380 அரசாங்க உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. நாடு முழுவதுமுள்ள அரசாங்க காரியாலயங்களில் செப்டம்பர் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஊவா மாகாணத்திற்கென 42 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றுள் 30 ஆயிரத்து 657 விண்ணப்பதாரிகளே தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.

இதன்படி பதுளை மாவட்டத்திற்கென கிடைத்த 25 ஆயிரத்து 873 விண்ணப்பங்களில் 19 ஆயிரத்து 985 பேரின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எஞ்சிய 5 ஆயிரத்து 888 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள 16 ஆயிரத்து 164 விண்ணப்பங்களுள் 10 ஆயிரத்து 672 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ள்ளன. மிகுதி 5 ஆயிரத்து 492 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரிக ளின் பெயர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படும் அதனைத் தொடர்ந்து அஞ்சல் வாக்குகளின் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். செப்டம்பர் 4 மற்றும் 05 ஆம் திகதி யன்று தபால் மூலம் வாக்களிக்க தவறும் பட்சத்தில் கொழும்பிலாயின் தேர்தல் செயலகத்திலும் ஏனைய மாவட்டங்களாயின் தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும் செப்டம்பர் 11 ஆம் திகதியன்று வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. (tk)

Related Post