Breaking
Sat. Jun 21st, 2025

மஹாவலி கங்கையில் நீராடச்சென்று காணாமல் போன கம்பளை மரியாவத்தையை சேர்ந்த 8ஆம் வகுப்பு  சிறுவன் முகம்மத் மனாஸ் இன் சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற் படையினரின் உதவியுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிறுவன் நீராடிய இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை ஸாஹிரா கல்லூரி மாணவன்  மனாஸ் தனது நண்பர்களுடன் நேற்று திங்கட்கிழமை நண்பகல், மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவனுடன் நீரில் மூழ்கிய மேலும் இரு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கம்பளை ஸாஹிரா பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரே மஹாவலி கங்கையில் நீராடச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post