Breaking
Mon. Dec 15th, 2025

கொழும்பு – பதுளை பிரதான வீதியின், ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் டீசல் பௌசர் ஒன்று இன்று முற்பகல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டீசலை அகற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விமானப்படையினர் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

By

Related Post