பொத்துவில் மக்களுடனான சந்திப்பில் தலைவர் ரிஷாட்!

இன்றைய தினம் (07) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பொத்துவில், ஹிதாயாபுர  மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கட்சியின் முக்கியஸ்தர் மனாப் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.