Breaking
Thu. May 23rd, 2024

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்சி காலத்தில் தான் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 60 பாட­சா­லைகள் அழிக்­கப்­பட்­டன. ஆனால் இன்று சஜித் பிரே­ம­தாச முஸ்­லிம்கள் வில்­பத்து காட்டில் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக விமர்­சித்து கொண்­டி­ருக்­கிறார் என அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

வடக்கில் வாழ்ந்த முஸ்­லிம்­களை அவர்கள் வாழ்ந்த இடங்­க­ளி­லேயே மீளக்­கு­டி­யேற்றி அவர்­க­ளுக்­கான அனைத்து வச­தி­க­ளையும் ஜனா­தி­பதி வழங்­குவார் என்ற திட­மான நம்­பிக்கை இருப்­ப­தா­கவும் அமைச்சர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஒதுக்­கீட்டு சட்­டத்தின் கீழான கட்­ட­ளை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே கைத்­தொழில் மற்றும் வணிக அலு­வல்­கள் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

வில்­பத்து காடு அழிக்­கப்­ப­டு­வ­தா­கவும் முஸ்­லிம்கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தா­கவும் இதில் நான் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் சஜித் பிரே­ம­தாச எம்.பி. இன்று சபையில் தெரி­வித்தார்.

இக் குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் பொய்­யா­னவை உண்­மைக்கு புறம்­பா­னமை.

நாடு பிள­வு­ப­டு­வதை எதிர்த்து நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்­காக குரல் கொடுத்­ததால் தான் விடு­தலை புலி­களால் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­றேற்­றப்­பட்­டார்கள்.

அதுவும் சஜித் பிரே­ம­தாச எம்.பி.யின் தந்­தையார் பிரே­ம­தாச ஜனா­தி­பதி பதவி வகித்த போதே இது நடை­பெற்­றது.

ஆனால் ஜனா­தி­பதி பிரே­ம­தா­சவோ அவ­ரது அன்­றைய அர­சாங்­கமோ முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வொரு உத­வி­யை­யுமே வழங்­க­வில்லை. முஸ்­லிம்­களை மீளக் குடி­யேற்­றவும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

ஆனால் ஜனா­தி­பதி மகிந்த ராஜ பக் ஷ நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். இந் நிலையில் முஸ்­லிம்கள் வடக்கில் தாம் வாழ்ந்த சொந்த இடங்­களில் மீளக் குடி­யேற்ற நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­ப­டு­கின்­றன. இரு­பது வரு­டங்­க­ளுக்கு பிர­தே­சங்­க­ளுக்கு செல்­லா­ததால் அப் பிர­தே­சங்கள் காடு மண்டிக் கிடக்­கின்­றன.

அவற்றைத் தான் சுத்தம் செய்­கிறோம். இதற்கு தான் எதிர்­க்கட்­சி­யி­னரும் இன­வாத சக்­தி­களும் காடு­களை அழிப்­ப­தாக பொய் கூறி பிரச்­சி­னை­களை கிளப்­பு­கின்­றனர்.

சிலர் இதற்­காக குறிப்­பிட்ட சில ஊட­கங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இதனை கைவி­டுங்கள். இந்­நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்­கா­கவே முஸ்­லிம்கள் தமது வாழ்­வி­டங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர்.

ஜனா­தி­ப­தியின் தலை­மையில் இன்று மீள் குடி­யேற்ற நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. வீடு­களை இழந்த 20,000 பேருக்கு மீண்டும் வீடுகளையும் அடிப்படை வசதிகள் பாடசாலைகள் ,பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுப்பார் என்ற திடமான நம்பிக்கையுள்ளது.

யுத்தத்தின் பின்னர் இன்று வடக்கு கிழக்கு பாரிய அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.(வீரகேசரி 24-05-2014)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *