Breaking
Mon. Dec 15th, 2025

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தீ விபத்தால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மின்சாரக் கோளாரே இந்த தீப் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

By

Related Post