Breaking
Sun. Apr 28th, 2024

அஷ்ரப் ஏ சமத்

வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில் 9  பேர் கொண்ட குழு தோ்தல் குதிக்கின்றனா்.
இந்த வேட்பாளா் பட்டியலில் அ.இ.ம.கா. முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளா், தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளா்கள்  இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனா்.
இதேவேளை, அ.இ.ம.கா, ஜ. தே.கட்சியின் யாணைச் சின்னத்தில்  புத்தளத்தில் முன்னாள் மாகண அமைச்சா் நவவி,  அநுராதபுரத்தில்  பிரபல சமுக சேவையாளரும் வா்த்தகருமான  இஷாக் ஹாஜி,  போட்டியிடுகின்றனா்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பளாளா் பிரதியமைச்சா் எம். எஸ்.எஸ் அமீா் அலி, தலைமையிலான  குழு களமிறங்கியுள்ளனா். இதேவேளை, திருமலை – குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் அ.இ.ம.காங்கிரஸ் ஜ.தே.கட்சியில் பட்டியலில் தமது வேட்பாளா்களை களத்தில் இறக்கியுள்ளது.
அத்துடன் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டததில் அ.இ.ம.காங்கிரசின் முதன் முறையாக மயில் சின்னத்தில் தோ்தலில் தனித்து தமது கட்சி வேட்பாளா்களை நிறுத்தியுள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
முதன்மை வேட்பாளராக முன்னாள் எம்.பியும் சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகருமான  பொத்துவில்  அப்துல் மஜீத்  களம் இறங்கியுள்ளாா்.  அவரது தலைமையில் –  கல்முனை முன்னாள் மேயா் சிறாஸ் மிராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா் கலாநிதி இஸ்மாயில், கணனி பொறியியலாளா் அன்வா் முஸ்தபா, தொழில் அதிபா்   நபீல்,  தொழிலதிபா் நதீா்  வெஸ்டா் றியாஸ் உட்பட 11 பேர் தோ்தலில் குதிக்கின்றனா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *