Breaking
Fri. May 17th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில்.

குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) யின் ஆலோசனையில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது.
அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாகோ பிரதேசசபை உறுப்பினர் அபூ தாலிபின் வேண்டுகோளுக்கினங்க.இதன் ஆறாவது கட்டமாக மாகோ, ரந்தனிகம கிராமிய இரு குளங்களுக்கு மீன்களை விடும் நிகழ்வு நேற்று (27) இடம்பெற்றது.
இத்திட்டத்தில் குளங்களை அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு குளங்களை தெரிவு செய்து சுமார் 30,000 மீன்கள் விடப்பட்டது.இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாகோ பிரதேசசபை உறுப்பினர் அபூ தாலிபி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களான ஸரூக் , ரஸ்மின், நீரியல்வல அதிகரிகள், மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post