Breaking
Thu. May 2nd, 2024

முசலியூர் .கே.சி.எம்.அஸ்ஹர்

மன்னார் முஸ்லிம் அரசியலை நோக்கும் போது மன்னாரின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக மர்ஹும் றஹீம் அவர்கள் சேவை புரிந்துள்ளார்.இவருக்கு அடுத்து சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதியமைச்சர் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் அவர்களும் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் மர்ஹும் என்.எம்.ஐயூப் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து மூன்று முறை றிசாட் பதியுதீன் அவர்களும்  , இரு முறை நூர்தீன் மசூர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசை விட்டு வெளியேறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் ,வன்னியிலிருந்து தமது கட்சி சார்பில் மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களையும் பெற்றுக் கொண்டார்.ஒருவர் மக்கள் பிரதிநிதியாக மூன்று முறை தொடர்ந்து தெரிவு செய்யப்படுவது என்பது சாதாரண விடயமல்ல.அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கின்ற மிகவும் நெருக்கமான உறவு மிகவும் பலமானது.

சரித்திரத்திலே முசலிப்பிரதேசத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டு இருக்கவில்லை.’ அன்று ஒரு ஆய்வாளன் சொன்னான் முசலியில் பல கிராமங்கள் உள்ளன.அவர்களை ஒரு போதும் ஒன்று படுத்த முடியாது.முரண்பாடுகள் அதிகம் அவர்களிடம் உண்டு இதனால் ஒரு போதும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை முசலி பெறாதென்று’ இதனைப் பொய்யாக்கி, ‘முசலி மக்களை ஒன்று படுத்தி ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுத் தங்கத்தட்டில் வைத்து முசலி மக்களுக்கு வழங்கியவர் றிசாத் பதியுதீன்’ என்றால் அதில் எவ்வித மாற்றுக கருத்துக்கும் இடமில்லை.

அப்பாராளுமன்ற உறுப்பினருக்குத் தேவையான அனைத்து தலைமைப் பயிற்சிகளையும் வழங்கி அவரையும் இணைத்துக் கொண்டு முசலிப்பிரதேச மக்களுக்கு பௌதீக வசதிகளையும் வீதிகள்,குளங்கள்,பாலங்கள்,பொதுக்கட்டிடங்கள்,பாடசாலைகள் , சமய நிறுவனங்கள்,கடற்றொழில் உபகரணங்கள்,கிராமிய மு.சங்கக்களுக்கும், பள்ளிவாயல்களுக்கும் உழவு இயந்திரம் , அரச உத்தியோகங்கள்  என எல்லையற்ற உதவிகளை செய்து உள்ளார் .வன்னிச் சரித்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்குச் சவாலாக ஒருவரும் தோன்ற முடியாது வன்னி முஸ்லிம் மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலேயே உள்ளனர். அம்மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ள அமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்கள் என்றுமே கட்டுப்பட்டு நடப்பர்.

இலங்கையரசில் ஆளும் கட்சியால் பின்வரும் கட்சிகள் உடைக்கப்பட்டமையை நாம் யாவரும் அறிவோம். ஐ.தே.கட்சி , மக்கள் விடுதலை முன்னணி , முஸ்லிம் காங்கிரஸ் , தமிழர் விடுதலைக் கூட்டணி இவ்வரிசையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் உடைக்கும் முயற்சிகள் திரை மறைவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்குப் பலியாக அற்ப சொற்ப சலுகைகளுக்காக முசலியின் பாராளுமன்ற பிரதிநிதி சோரம் போய்விடக்கூடாது.இதனை முசலிப்பிரதேச மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். நாளை நன்றி கொன்ற சமூகம் எனும் பெயர் எமக்கு வந்து விடக்கூடாது.
பாராளுமன்ற உறுப்பினர் நூர்டீன் மசூர் அவர்களின் மரணத்தின் பின்னர் மேலும் ஒரு முசலி மகன் ‘முத்தலி பாவா பாரூக’; எஸ்.எல்.எம்.சி. சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

2015 பெரும் பாலும் தேர்தல் ஆண்டுகளாக இருக்கும் கட்சிகளை காட்டிக்கொடுத்து விட்டுச் சென்ற பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் , முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் வரிசையில் அமர்ந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.இது தான் சரித்திரம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *