Breaking
Mon. May 20th, 2024

அடுத்த ஐந்து வரு­ட ­கா­லத்தில் மிகவும் துன்­ப­க­ர­மான தோட்­ட­ப்புற லயம் வாழ்க்­கைக்கு முடி­வு கட்­டி­விட்டு அனைத்து வச­தி­க­ளு­டனும் கூடிய மலை­ய­கத்தில் புதிய கிரா­ம­ங்களை உரு­வாக்­க­வுள்ளோம் என மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் பி. திகாம்­பரம் தெரி­வித்தார். முன்­னைய ஆட்­சியின் போது மலை­ய­கத்­திற்கு எந்­த­வொரு அபி­வி­ருத்­தியையும் கொண்­டு­வ­ராத அரா­ஜகப் போக்­கி­லான அர­சி­யலை நாம் மீண்டும் தொட­ரப்­போ­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மலை­யக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­ச­ராக நேற்று கட­மை­களை பொறுப்­பேற்­றதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்இ நடந்து முடிந்த பொது தேர்­தலின் போது நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்தும் அதி­க­மான வாக்­கு­களை தந்து என்னை வெற்றி பெறச்­செய்­துள்­ளனர். தேர்தல் பிர­சார மேடை­களில் எனக்கு எதி­ராக பல குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்பட்­ட­துடன் திகாம்­பரம் என்­பவர் 100 நாட்­க­ளுக்கு மாத்­தி­ரமே அமைச்சர் என்று பல­வாறு குறிப்­பிட்­டனர். தேர்­தலில் திகாம்­பரம் தோல்வி அடைவார் என்றும் குறிப்­பிட்­டனர்.

கடந்த காலங்­களில் மலை­யக அர­சியல் தலை­மை­க­ளுக்கு வீட­மைப்பு மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு என்ற நல்ல அமைச்­சுக்களின் கிடைத்த போதிலும் மலை­யக மக்­களின் விடி­வுக்­காக எத­னையும் செய்­ய­வில்லை. வெறு­ம­னவே மாடி­வீ­டு­க­ளுக்கு மாத்­தி­ரமே வழி­வ­குத்­தனர். மலை­ய­கத்­திற்கு மாடி வீடு பொருந்­தாது.

அது மாத்­தி­ர­மின்றிஇ முன்­னைய அமைச்­சர்­க­ளினால் மக்­க­ளு­டைய பணம் பெரு­ம­ளவு மோசடி செய்­யப்­பட்­டது. இந்­நி­லையில் 100 நாள் அர­சாங்­கத்தின் 400 தனி­வீ­டு­களை நிர்­மா­ணித்தோம். அடுத்த ஐந்த வரு­டத்தில் குறித்த வீடு­களை நாம் மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

அதே­போன்று அடுத்த ஐந்து வருட காலப்­ப­கு­தியில் மலை­யக மக்கள் முகங்­கொ­டுக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­களை தீர்த்து வள­மான மலை­ய­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். எனக்கு இந்த அமைச்சை வழங்­கு­வ­தற்கு முன்பு பிர­தமர் இனிமேல் தோட்டம் என்ற பெயர் பாவ­னைக்­குட்­ப­டுத்தக் கூடாது. மலை­யக கிராமம் என்றே பிர­யோ­கிக்க வேண்டும் என்று கூறினார். இதன் ­கா­ர­ண­மா­கவே இவ்­வா­றா­ன­தொரு அமைச்சு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அடுத்த ஐந்து வருட காலத்தில் மிகவும் துன்பகரமான தோட்டபுற லய வாழ்க்­கைக்கு முடிவு கட்டிவிட்டு அனைத்து வசதிகளுடனும் கூடிய மலையக கிராமமொன்றை உருவாக்கவுள்ளோம் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *