Breaking
Sat. May 18th, 2024

நிரா­யுதபாணி­க­ளாக பேரணி நடத்­திய மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்த உத்­த­ர­விட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் அத்­தாக்­கு­தலை தடுத்து நிறுத்தத் தவ­றிய உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்று நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் வலியுறுத்தினார்.

அத்துடன் சட்­டத்தை நிலைநாட்ட வேண்­டி­ய­வர்­களே சட்­டத்தை மீறு­வதா நல்­லாட்­சியின் விளைவு என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் கேள்வி எழுப்­பினார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட நெறி மாண­வர்கள் மீது பொலிஸார் நடத்­திய தாக்­குதல் தொடர்பில் விசேட வினாக்­களை எழுப்­பு­கை­யி­லேயே எதிர்க்­கட்சித் தலைவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

கடந்த 29 ஆம் திகதி கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட நெறி மாண­வர்கள் மீது பொலிஸார் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.

இச் சம்­பவம் அனைத்­தையும் நாம் தொலைக்­காட்­சியில் பார்த்தோம். உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட நெறி மாண­வர்கள் தமது பட்­டத்தை பல்­க­லைக்­க­ழக பட்­டத்­துக்கு இணை­யா­ன­தாக அங்­கீ­க­ரிக்­கு­மாறு கோரிக்கை விடுத்து ஊர் வல­மாக வந்­தனர்.

அவர்­களின் இந்தக் கோரிக்கை முன்னர் கடந்த கால ஆட்­சியில் சுற்­ற­றிக்கை மூலம் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்த போதும் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் அதனை மீளப் பெற்றுக் கொண்டு இரத்து செய்­தனர்.இதனை மீண்டும் அமுல்­ப­டுத்­து­மாறு கோரியே மாண­வர்கள் அமை­தி­யாக நிரா­யு­த­பா­ணி­க­ளாக ஊர்­வலம் வந்­தனர்.அவர்கள் அடி தடி வன்­மு­றை­களில் ஈடு­ப­ட­வில்லை.

ஊர்­வ­ல­மாக வந்த மாணவ மாண­வி­களின் கைகளில் எந்­த­வி­த­மான ஆயு­தமோ கற்­களோ, தடி­களோ இருக்­க­வில்லை.அவர்கள் அங்கு போடப்­பட்­டி­ருந்த வீதித் தடை­களை அகற்­றவே முனைந்­தனர்.

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்­சப்­பட்­ட­துடன் கண்ணீர் புகை குண்டுத் தாக்­கு­தலும் நடத்­தப்­பட்­டது.கடு­மை­யான தாக்­கு­தல்­க­ளையும் பொலிஸார் இதன்­போது மேற்­கொண்­டனர்.மாண­வர்கள் பின்­வாங்­கிய போதும் பொலிஸார் அவர்­களை விரட்டி விரட்டி தாக்­கி­னார்கள்.

இதனால் பல மாண­வர்கள் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். மாண­வர்கள் மீது கடு­மை­யான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.பொலிஸார் பொறுப்­பற்ற விதத்தில் நடந்து கொண்­டனர்.சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­ய­வர்­களே சட்­டத்தை மீறி­விட்­டனர். இதுதான் நல்­லாட்­சியின் விளைவா?

இத் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் குற்றம் இழைத்­த­வர்கள் அடை­யாளம் காணப்­பட வேண்டும்.இத்­தாக்­கு­த­லுக்கு உத்­த­ர­விட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் இத்­தாக்­கு­தலை தடுக்கத் தவ­றிய பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­தி­ருப்­பது உறுதி செய்­யப்­பட வேண்டும்.

இலங்­கையில் இல­வசக் கல்வி வழங்­கப்­ப­டு­கின்ற போதும் அதனால் வேலைவாய்ப்புகள் கிடைக்காது விட்டால் என்ன பயன்?வடக்கு கிழக்கு மாணவர்களில் வேலையில்லாப் பிரச்சினை மோசமாகவுள்ளது. வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களையாவது உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *