Breaking
Sat. May 18th, 2024

-முர்ஷித் கல்குடா-

முஸ்லிம்களின் ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் , வேறு இடங்களில் ஏதாவதொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வு (27) இடம் பெற்ற போதே, அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்-

முஸ்லிம்களின் அபாயாவை பாடசாலைக்கு அணிந்து வரக் கூடாது என்று சொல்கின்ற ஒரு படித்த சமூகம் எமது மாகாணத்திற்குள் இருந்து வெளிச் செல்லுமாக இருந்தால் அது நல்ல செய்தியாக நான் பார்க்கவில்லை.

இந்த கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த தமிழ் அரசியல் தலைவர்களும் விழிப்புணர்வோடு பதில் சொல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தேசியத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து முடிந்து விட்டது. ஆனால் நாங்கள் இதற்கு சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இது கவலையாக இருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் நீண்ட வரலாறு கொண்ட எதிர்பார்ப்புடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் அபாயாவை பற்றி கதைக்க வேண்டும் என்று போர்க் கொடி தூக்குகின்ற கற்ற சமூகமாக இருக்குமாக இருந்தால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டது. இறுதியாகவுள்ள அபாயா பிரச்சனை தேசியத்தில் தள்ளப்பட்டுள்ளது துரதிஷ்ட வசமாகும்.

எனவே இந்த விடயத்தில் தேசியத்தில், மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அதிக கவனம் செலுத்தி, இந்த வேலைத் திட்டத்தில் தங்களுடைய பதிவுகளை செய்ய வேண்டி உள்ளது. இதை செய்ய தவறுமாக இருந்தால் இன்னும் விஷ்வரூபம் எடுத்து ஏனைய பகுதிகளில் ஒற்றுமையாக உள்ளதை ஏதொவொரு சக்திகள் குழப்பி விடும். அந்த முனைப்பை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சாதிக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலாளர் வை.யூசுப், பிரதி அமைச்சரின் ஏறாவூர் இணைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப், பிரதேச செயலக திட்டப் பணிப்பாளர் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை மிச் நகர் கிராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றமைக்காக அதிதிகளால் நினைவுச்சினம் வழங்கியதுடன், அவர்களது தந்தைக்கு பொன்னாடை போர்த்தியதுடன், அவர்களுக்கு குர்ஆனை கற்பித்த உலமாவும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *