Breaking
Sun. Apr 28th, 2024

திர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை அதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் கூட அரச தரப் பாலும் எதிர்க்கட்சிகளாலும் அதற் கான முன்னேற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு தரப்பில் மஹிந்த மூன்றாவது முறையாக வும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது தொடர்பான சட்டபூர்வமான அங்கீகாரம் பற்றிய விளக்கத்தை உயர் நீதி மன்றத்திடம் பெறல், எதிர்க்கட்சி களை உடைத்து தம்பக்கம் download (2)

பலம் சேர்த்தல், புதிய அமைச் சுப் பதவிகளை வழங்கி ஆத ரவு திரட்டல் போன்ற நடவடிக் கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. பத்து வருடங் களாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி யின் பயன்கள் மக்களுக்கு வழங் கப்படுகின்றன என்ற பேரில் கவர்ச்சியான வரவு – செலவுத் திட்டமும் முன்வைக்கப்பட்டுள் ளது. அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வற்றுக்கு எதிராகக் கருத்து களை வெளியிட்டும் இந்தியா வுக்கு சினமூட்டும் சில சீன சார்பு நடவடிக்கைகளை மேற் கொண்டும் மஹிந்த ராஜபக்­ ஒரு வீரபுரு­ன் என்ற மாயை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது.
பொதுவேட்பாளர்

அதேவேளை, நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கு வது என்ற அடிப்படையில் ஒரு பொதுவேட்பாளரைக் களமி றக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அது தொடர் பாக வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படா விட்டாலும் ஒரு பொதுவேட்பா ளரை நிறுத்துவது என்பதில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

தமிழருக்குச் சாத்திய மில்லை
இலங்கையைப் பொறுத்த வரை ஒரு தமிழரோ அல்லது ஒரு முஸ்லிமோ ஜனாதிபதியாக வருவது சாத்தியமில்லை. இங்கு வேரோடி விழுதுவிட்டு கிளை பரப்பி நிற்கும் இனவாத, மத வாத அரசியல் அதற்கு அனு மதிக்கப் போவதில்லை.

எனவே சிறுபான்மைச் சமூ கத்தினர் ஏதோ ஒரு தரப்பை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத் துக்கு உட்பட்டுள்ளனர். அப்படி அவர்கள் எந்தவொரு தரப்பை யும் ஆதரிக்காது தேர்தலை நிராகரித்துவிட்டால் அவர்க ளால் ஆதரவு வழங்கக்கூடிய ஒரு சில தகுதிகளையாவது கொண்ட தரப்புக்குப் பாதகமாக மாறிவிடும். எனவே வடக்கு‡ கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் ஆகிய தரப்பினரும் ஏதோ ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்.

எந்தத் தேர்தல் முதலில் ப்படியான ஒரு களநிலை மையில் ஜனாதிபதித் தேர்தலா, நாடாளுமன்றத் தேர்தலா முத லில் இடம்பெறும் என்ற கேள் விக்கும் பதில் கிடைத்துவிட்டது. ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலத்துக்கு ஏறக்கு றைய இரண்டு வருடங்கள் முன் னதாக அது இடம் பெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி எதிர் வரவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த மிகுதிக் காலப் பகுதியில் எப்போது வேண்டுமா னாலும் அடுத்த பதவிக் காலத் துக்குச் சத்தியப்பிரமாணம் செய்ய முடியும். அதாவது, ஏறக் குறைய எட்டு ஆண்டுகள் பதவி வகிக்க வாய்ப்புண்டு. இது நாம் எதிர்நோக்கியுள்ள ஓர் ஆபத்து. அதாவது மீண்டும் நாம் எட்டு ஆண்டுகள் இந்தச் சர்வாதிகார கொடுங் கோளாண்மை ஒடுக்கு முறை ஆட்சியை அனுபவித் தாக வேண்டும்.

அடுத்தது, ஜனாதிபதித் தேர்த லில் மஹிந்த ராஜபக்­ வெற்றி பெறுவாரானால் அவர் அதிகா ரத்தில் இருந்தபடியே ஜனாதி பதித் தேர்தலை நடத்துவார். அவர் தனது அதிகாரத்தைப் பாவித்து எதிர்க்கட்சிகளை உடைத்து ஒரு பகுதியைத் தன்னுடன் இணைப்பதில் வெற்றிபெறு வார். அதன் மூலமும் அரச நிர் வாக யந்திரத்தையும் சிவில் பாதுகாப்புத் தரப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தி அவர் மூன்றில் இரண்டு பெரும் பான்மையைப் பெற்றுவிடுவார். அதன் அடிப்படையில் அரச மைப்புக்கு மேலும் மேலும் திருத்தங்களைக் கொண்டு வந்து தன்னை ஓர் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக நிலைநாட்டிக் கொள்வார்.

இரண்டாவது பேராபத்து
இன்று தமிழ், முஸ்லிம், மலை யக மக்கள் மீதும் மாணவர்கள், தொழிலாளர்கள் மீதும் மேற் கொள்ளப்பட்டு வரும் ஒடுக்கு முறை நடவடிக்கைகள் மேலும் மேலும் பல முனைகளில் விரி வடையும். இது இரண்டாவது பேராபத்தாகும். அதாவது ஜன நாயகத்தின் பேரால் ஒரு சர்வாதி காரம் நிலை நிறுத்தப்படும்.

அதேவேளை, ஜனாதிபதி யின் பதவிக்காலம் 4 ஆண் டுகள் பூர்த்தியான பின்பு அடுத்த தேர்தலை நடத்தவும் மஹிந்த ­ மூன்றாவது முறை யாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் உயர் நீதிமன்றத்தால் ஆலோ சனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜனவரியில் ஜனாதி பதித் தேர்தல் இடம்பெறுவதும் அதில் மஹிந்த ராஜபக்­ போட்டி யிடுவதும் ஓரளவுக்கு உறுதி யாகிவிட்டது.
இப்படியான நிலையில் இலங்கை வாழ் சிறு பான்மை மக்கள் எப்படியான ஒரு நிலைப் பாட்டை எடுக்க வேண்டும் என மிகவும் ஆழமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலை யில் உள்ளனர்.

மலையகக் கட்சிகளின் முடிவு
மலையக மக்களைப் பொறுத் தவரையில் அவர்களின் முக் கிய கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலை யக மக்கள் முன்னணி, தொழி லாளர் தேசிய காங்கிரஸ் என் பன அரசின் பங்காளிக் கட்சிக ளாக விளங்கி வருகின்றன. அதுமட்டுமன்றி, ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோர் அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து தமது உறுதியான ஆதரவைத் தெரி வித்துள்ளனர். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் வேலாயு தத்தை அரசுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு ஆறுமுகன் தொண் டமான் அழைப்பும் விடுத்துள் ளார்.

எனவே, மலையக மக்கள் இந்த அரசில் எவ்வித பயன் களைப் பெற்றுக்கொள்ளா விட் டாலும்கூட அமைச்சுப் பதவிக ளையும் பிரதி அமைச்சுப் பதவி களையும் பெற்றுக்கொண்ட மலையகத் தலைமைகள் மலை யக மக்களின் வாக்குகளை ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுப் பதில் முனைப்புடன் செயற்படு வார்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசி யக் கட்சியில் போட்டியிட்ட மலை யக மக்களின் பிரதிநிதி செந்தில் தொண்டமான் பெற்ற வாக்குக் குச் சமனாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பதும் கவனிக்கத் தக்கது. எனவே மலையகத்தில் மஹிந்த ராஜபக்­வுக்கு எதி ராக ஒரு பகுதி வாக்குகள் விழும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் கட்சிகள் அர சின் பக்கம்
முஸ்லிம் மக்களைப் பொறுத் தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று அமைப்புகளும் அரசில் அங்கம் வகிக்கின்றன. அதுமட்டுமன்றி, ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியைச் சேர்ந்த முஸ் லிம் தலைவர்களும் உண்டு. முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் என்பது சந்தேகத் துக்கிடமற்ற ஒரு முடி வாகும். முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருந்த போதும் எந்த முடிவை எடுக்கப் போகி றது என்பது பற்றி எவ்வித அறிவித்தலையும் வெளியிட வில்லை.
ஆனால், தொடர்ந்து பள்ளி வாசல்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அளுத்கம, பேரு வளை போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப் பட்ட பேரழிவுகள் என்பன ஊவா மாகாண சபைத் தேர் தலில் பிரதிபலித்தன.

முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளை விட முஸ்லிம் மக் கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஒரு கட்சி என்ற வகை யில் சுதந்திரக் கட்சி, முஸ்லிம் மக்களின் நலன்களின் அடிப்ப டையிலும் முஸ்லிம் காங்கிர ஸின் தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் ஒரு சரியான முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் முடிவு
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எப்போ துமே இன்றைய அரசுக்கு எதி ரான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்ட பின்பும் தமிழ் மக்கள் மீது தொடரும் ஒடுக்கு முறை நடவடிக்கைள் அரசின் மீது மேலும் மேலும் வெறுப் பையே ஏற்படுத்தியுள்ளன. ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­ தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைத் தங்களுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத் துள்ளார். இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அந்த அழைப்பைத் தாங்கள் உடனடியாக நிராகரிக்க வில்லையயனவும் அதை ஆழ மாகப் பரிசீலனை செய்து முடி வெடுக்கப்போவதாகவும் தெரிவித் துள்ளார். நாடாளுமன்றில் உரை யாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பி னர் பொன்.செல்வராசா ஜனாதி பதி மஹிந்த ராஜபக்­ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப் பிரச்சினை தொடர்பாக ஒரு நியாயமான தீர்வை முன் வைத்தால் பதிலுக்கு அவர் களின் அழைப்பைப் பரிசீலனை செய்யத் தயார் எனக் கூறியுள் ளார்.

ராஜபக்­வை ஆதரிக் கலாமா?

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ – மூனிடம் இனப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துடன் மேலதி கமாகவும் தீர்வு வழங்குவ தாகவும் அப்படி ஒரு வாக்குறு தியை இந்திய வெளியுறவுச் செய லர் கிருஷ்ணாவிடமும் வழங் கியமையையும் நாம் மறந்து விட முடியாது. ஆனால் நடை முறையில் 13 ஆவது திருத்தச் சட்டமே படிப்படியாக வெட்டப் பட்டு வெறும் கோதாக்கப்பட்டு விட்டது. அதைக்கூட நடை முறைப்படுத்தாத அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றுமா என்ற கேள்வி எழத்தான் செய் கிறது. சர்வதேசத்தையும் இந்தி யாவையும் ஏமாற்றும் அர சுக்கு தேர்தல் வாக்குறுதியை மீறுவது ஒரு பெரிய காரிய மாக இருக்கப்போவதில்லை.

எதிர் வரும் எட்டு ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போகும் இந்தத் தேர்தல் சிறுபான்மை மக் களைப் பொறுத்தவரை மிக மிக முக்கிய மாகும். ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ, ஒரு மலையகத் தமிழரோ ஜனாதிபதியாக வர முடியாவிட்டாலும் எமது ஐக்கி யத்தின் மூலமும் கொள்கை உறுதிப்பாட்டின் மூலமும் நாம் வெற்றி தோல்வியைத் தீர்மா னிக்கும் ஒரு வலுமிக்க சக்தி யாக விளங்க முடியும். அப்படி யான நிலையிலேயே எமது பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும்.
நிதானமாக முடிவெடுப் போம்

இலங்கையில் வாழும் சிறு பான்மை இனங்கள் இணைந்து ஒரு அணிக்கு வராதுவிட்டால் இந்தத் தேர்தல் அறி விப்பானது ஒரு பெரும் அபாயமாக மாறும். அதற்கேற்றவகையில் நாம் தந்திரோபாய அடிப்படையிலி ருந்து எமது முடிவுகளை எடுத் துத் தீவிரமாகச் செயற்படத் தவ றினால் எதிர்வரும் எட்டு ஆண் டுகள் அடிமை வாழ்வுக்கும் பேரழிவுக்கும் ஆட்படுவோம். (OS)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *