Breaking
Tue. May 14th, 2024

மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிர் கான், அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். களின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:-

இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை இஸ்லாம் சார்ந்த நடவடிக்கையாக அந்த நபர் கருதலாம். ஆனால், ஒரு முஸ்லிமாக இதைப்பார்க்கும் என்னால் இஸ்லாம் சார்ந்த அவனது செயலாக இதைப் பார்க்க முடியவில்லை.

அப்பாவி மக்களை கொல்பவர்கள் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை அவன் ஒரு முஸ்லிமே அல்ல. நான் முஸ்லிம்தான் என்று கூறிக்கொள்ள அவன் முன்வரலாம். ஆனால், அவனை நாம் அப்படி அங்கீகரித்து விடக்கூடாது. அவன் தீவிரவாதி, ஒரு தீவிரவாதியாகவே அவனை அங்கீகரிக்க வேண்டும்.

ஐ.எஸ். களுக்கு மட்டுமல்ல, இதைப்போன்ற எண்ணம் கொண்ட அனைவருக்குமே இது பொருந்தும். இன்று, அது ஐ.எஸ். இயக்கமாக இருக்கலாம். நாளை, வேறேதாவது ஒரு இயக்கமாக இருக்கலாம். தீவிரவாத சிந்தனை என்பது கவலைக்குரிய விவகாரமாகவே எனக்குத் தோன்றுகின்றது.

இதுபோன்ற தீவிரவாத சிந்தனை எங்கிருந்து புறப்பட்டாலும் அதன் விளைவு, எதிர்மறையாகவும், பேரழிவாகவும்தான் இருக்கும் என்றே நான் உணர்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *