Breaking
Thu. May 16th, 2024

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று (04) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நேரம் 12.30மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

கெபினட் அமைச்சர்களின்; எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பதற்கு நேற்று பாராளுமன்றம் அனுமதி வழங்கியதையடுத்தே இன்று இந்த அமைச்சரவை பதவிப்பிரமானம் இடம்பெறவுள்ளது.

குறித்த அமைச்சரவையில் முகா தலைவர் ரவுப் ஹக்கீம் , அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன், ஐதேக எம்பிக்களான கபீர் ஹாசிம், ஹலீம் மற்றும் சுகா எம்பியான ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு தேசிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ள அந்த நிகழ்வு இலங்கையில் ஜூம்ஆ நேரமான 12.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை முஸ்லிம் சமுகத்தை பெரும் ஆழ்ந்த கவலைக்குள் இட்டுச் சென்றுள்ளது.

ரணில் -மைத்திரி நல்லாட்சி மலருவதற்கு காரணமாக இருந்த முஸ்லிம் சமுகத்தினை அகௌரவப் படுத்தும் நேர ஒதுக்கீடாகவே இன்று நன்பகல் 12.30 மணி அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள இந்த நேரத்தை முற்படுத்துங்கள் அல்லது பிற்படுத்துங்கள் என மேற்சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் நல்லாட்சித் தலைவர்களிடம் வேண்டிக் கொண்ட போதும் அவர்களது வேண்டுகோள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே அறியவருகின்றது.

இதனால் பெரும் கைசேதத்திற் குள்ளாகியுள்ள மேற்சொன்ன ஐந்து முஸ்லிம் அமைச்சர்களும் அமைச்சரவைப் பதவிப்பிராணத்தின் போது சமுகமளிக்காமல் ஜூம்ஆ நிறைவடைந்ததன் பிற்பாடு அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளலாம் என ஜனாதிபதி செயலகத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

அதிலும் – அமைச்சரவைப் பதவிப் பிரமாண ஆரம்ப நிகழ்வில் சம்பிரதாய பூர்வமாக கலந்து விட்டு ஓரிரு நிமிடங்கள் அந்நிகழ்வில் அமர்ந்து விட்டு ஜூம்ஆவுக்காக வெளியேறி சென்று விடுவார்கள் என தெரியவருகின்றது.

பின்னர் 1.30 மணிக்கு மீண்டும் ஜனாதிபதி செயலகம் திரும்பும் மேற்சொன்ன 05 முஸ்லிம் எம்பிக்களும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

இது இவ்வாறிருக்க ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் பதவிப் பிரமாணம் நாளை அல்லது திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *