Breaking
Thu. May 2nd, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

வடக்கிலும், அதற்கு வெளியிலும் வாழும் தொழிலற்ற யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுததுச் செல்லும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்துவரும் மக்கள் நலன் திட்டத்தின் அடுத்த கட்டமாக 3000 யுவதிகளுக்கு தையல் பயிற்சியுடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த 20 வருடங்களாக வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை ஓரளவேனும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் அன்றைய அமைச்சராக இருந்த அமரர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்ட சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சிகளுக்கான உதவிகள், மீண்டும் தொடராக இடம் பெயர் மக்களுக்கும், மீள்குடியுறியுள்ள யுவதிகளுக்கும் மற்றும் ஏனைய மாவட்ட மக்களுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் முன் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பயிற்சிகளை பெற்று யைதல் இயந்திரங்களையும் பெற்று தையல் துறையில் தகுதியினை பெற்ற ஆயிரம் ஆயிரம் யுவதிகள் இருக்கின்றனர். இவர்கள் தாமாக தற்போது தமது குடும்பச் சுமையினை அதிலிருந்து மீற்கும் வகையில் தையல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றதை இப்போதும் காணமுடிகின்றது.

இவ்வாறு ஆயிரக்கணக்கான யுவதிகள் தமது வீடுகளில் இருந்து தொழில் செய்வது போன்று தையல் பேட்டையொன்றினை மன்னாரிலும், வவுனியாவிலும் உருவாக்கி இன்னும் எத்தனை எத்தனை யுவதிகள் அங்கு தொழில் புரியும் சந்தரப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்.

குடும்ப சுமை, தொழில் பெறுவதில் சிரமம், கலாச்சார பாதுகாப்பு போன்ற பிரதான ஆதிக்கத்துக்குட்படும் காரணிகள் தொடர்பில் மிகவும் கூர்ந்து அவதானித்து இதிலிருந்து இந்த யுவதிகள் நிவாரணம் பெறும் வகையில் தையல் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கற்றல் செயற்பாடுகளையும் வழங்கி சிறந்ததொரு சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுத்ததை இன்றும் நாம் நினைவு கூற வேண்டும்.

காலத்தின் தேவையினை தொடர்ந்து உள்ளுர், இடம் பெயர்நதோர் என்ற பாகுபாடுகளின்றி இந்த பயிற்சி நிலையங்களை உருவாக்கி அதனை் மூலம் எமது சகோதரிகள் நன்மையடையும் வகையில் இப்பணியினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் விரிவுபடுத்தினார்.

தையல் பயிற்சி வகுப்புகளை நெறிப்படுத்தி, புதிய பாடத்திட்டமொன்றினையும் அனுபவசாலிகளையும், துறை சார்ந்தவர்களையும் அனுகி உருவாக்கி இந்த பாடத்திட்டத்தை தம்மால் உருவாக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையங்களில் நடை முறைப்படுத்தியதுடன், இதற்கான அங்கீகாரத்தையும் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுத்து தொழில் பயிற்சி அதிகார சபையின் பங்களிப்பினை இந்த திட்டத்திற்குள் இணைத்து கொண்டார்.

அதன் பின்பாடு தேசிய மட்ட ரீதியில் இந்த உற்பத்திகளையும், தயாரிப்புக்களையும் சந்தைப்படுத்தும் வகையில் பாரிய கண்காட்சிகளை கிராமமம், நகரம், மட்டும் தேசிய மட்டத்தில் ஒழுங்குபடுத்தி அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்ததுடன், பிரதேசத்தில் தையல் கலையினை கற்றவர்களுக்கு வருமானம் ஈட்டும் அறிமுகத்தையும் ஏற்படுத்தினார்.

இதன் மூலம் தொழில் முயற்சியாளர்களை அடையாளப்படுத்தி தேசிய மட்டத்தில் முதலீடு செய்யக் கூடியவர்களை இப்பிரதேசங்களுக்கு அழைத்துவந்து தையல் பயிற்சியாளர்களனின் திறமைகளையும், கை விணைத்திறனையும் எடுத்துரைத்து அவர்களுக்கு நல்ல வருமானத்தை பெறும் சந்தர்ப்பத்தையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்படுத்திக் கொடுத்தார்.

யைதல் கலையில் ஈடுபடும் யுவதிகள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒரு பிரச்சினைாயக இருந்த போது ஜவர் கொண்ட சிறு குழுக்களை அமைத்து அவர்களுக்கு தமது அமைச்சின் மூலம் சுழற்சி முறையிலான வட்டியில்லாத் கடன் திட்டத்தை ஏற்படுத்தியதுடன், சேமிப்பு பழக்கத்தின் அவசியத்தையும், முகாமைத்துவத்தின் தேவைப்பாட்டினையும் விளங்க வைத்தார்.

இவ்வாறு யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அமைச்சரின் அடுத்த கட்ட நடவடிக்கைாயக 3000 யுவதிகள் நன்மையடையும் வகையில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியினை இன்று ஆரம்பித்துள்ளார்.

தற்போது அமைச்சர் றிசாத் பதியுதீன் வகிக்கும் அமைச்சின் மூலம் ஆடைத் தொழில் துறைக்கு வழங்கும் பங்களிப்பு அளப்பறியது. அந்த வகையில் மரபு ரீதியான மற்றும் பாரம்பரிய கைத்தொழில் துறையினை புத்துயிர் அளிக்கும் வகையில் கிழக்கில் ஆடைகளுக்காளன நிறமூட்டல் நிலையங்களை உருவாக்கும் திட்டத்திற்கும் அங்கீகாரம் அளித்துள்ளதுடன்,அது நடைமுறைக்கும் கொண்டுவரப் பட்டுள்ளதையும் காணலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *