Breaking
Fri. Dec 19th, 2025

ஊடகபிரிவு

அமைச்சர்   றிஷாதின்   அயராத முயற்சியின் மற்றுமோர் பெறுபேறாக  வெற்றிடமாக இருந்த மன்னார் கச்சேரி  கட்டிடத் தொகுதி  24 கோடி ரூபா செலவில்  கட்டப் படுகின்றது. இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 2014.10.14 நடைபெற்றது…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒதுக்கப்பட்ட   24 கோடி ரூபா   நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.செனவிரத்தின, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் விஜய தசநாயக்க, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் என பலரும் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வின்போது, 21 கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டது. அத்துடன், பிரதேச செயலகங்களுக்கான உபகரணங்கள், வரட்சி நிவாரண பணம் ஆகியவையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Capture2 Capture1 Capture

Related Post