Breaking
Mon. May 6th, 2024

-அஸ்ரப். ஏ. சமத்-

அமைச்சர் றிசாத்தினை கைது செய்து அவரது பதவியில் இருந்து அகற்றி சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இன்னும் 2 கிழமைக்குள் சிங்கள ராவாய பௌத்த துறவிகள் கொண்ட ஒரு குழு கொழும்பில் சாகும் வரை உண்னாவிரத்தில் இறங்க உள்ளோம்.

ஏற்கனவே இவர் வில்பத்து வனாந்தர பிரதேசங்களை அழித்து எமது அபே பூமியை நாசமாக்கியுள்ளார்.அத்துடன் அங்கு ஜ.எஸ.எஸ்.;ஆர் எனும் இஸ்லாமிய தீவிர இயக்கமொன்றும் அங்கு நிலைகொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. அன்மையில் அவர் அரபு அணிந்துள்hர் ஊடகவியலாளர்கள் அவரை அனுகியபோது அவருக்கு இந்த நாட்டின் முக்கிய 3 மொழிகளும் தெரியதவராக காணப்பட்டார்.

இவ்விடயம் சம்பந்தமாக ஏற்கனவே எமது அமைப்பு
இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர்களுக்;கு அறிவித்துளளோம்; அது பற்றி இதுவரை இவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு முடியாது போனால் இவரை விசாரணை செய்வதற்கு பௌத்த மஹா சங்கத்தினனரிடம் ஒப்படைக்கும்படி வினயமாகக் கேட்கின்றோம்.

மேற்கண்டவாறு தெஹிவளையில் உள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டில் சிங்கள ராவய தலைவர் அபில தயாரத்தின தேரோ,தெரிவித்தார்.
இம்மாநட்டில் சிங்கள ராவயைச் சேர்ந்த மடுலகலந்தே சுதத், போல சீலரத்தின தேரோகளும் ஆதராபூர்வமாக தமது கனனி முலம் படங்களையும் ஊடகவியலாளர்களிடம் காட்டி கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அங்கு சீலரத்தின தேரோ மேலும் கருத்து தெரிவிக்கையில் –

அப்பகுதியில் உள்ள பொலிசார், மற்றும் ;மாவட்ட அரசாங்க அதிபர் றிசாத் பதியுத்தீனுக்கு சார்பாகவே செயல்படுகின்றனர். கடந்த வாரம் நாங்கள் அங்கு சென்றபோது அரச மரங்களை நட்டு வந்தோம். ஆனால் அங்கு றிசாத்பதியுத்தீனின் அடிஆட்கள் இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில வந்து அம் மரங்களை பிடுங்கி எடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது றிசாத் பதியுத்தீனின் உறவினர்களுக்கே அங்கு காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு உள்ள கட்டார் நாட்டில் இருந்து ஒரு வீடமைப்புத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந் நிதி அரசாங்கம் ஊடாக வந்தாh. அதனை அமுல்படுத்திய அதிகாரிகள் திட்டங்கள் வழங்கிய அராபியர் பற்றி ஒரு விசாரனை மேற்கொள்ள வேண்டும்.;
அங்கு வன வளங்களை அழித்து ஏற்கனவே அரபு வசந்தத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

இவருக்கு கட்டார் நாட்டில் இருந்து வந்த நிதி மோசடி அத்திட்டம் ;அரசின் ஊடாக அமுல்படுத்தப்பட்டதா ? இத்திட்த்தின் நிதி கணக்கு வழக்குகள் பற்றி அடுத்த 2 நாட்களுக்குள் நிதி மோசடி, மற்றும் இலஞ்ச ஆணைக்குழு பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் ராவன வலய உறுப்பிணர்கள் தெரிவித்தனர்

வில்பத்து என்பது எமது பௌத்த பூமியாகும். இந்த பூமியை வென்றெடுத்த எமது சிங்கள இரானுவ வீரர்களாகும். இங்கு மரங்களையும் யாணைகளை அழித்து குடியேற்றம் செய்வதை எங்களால் பௌத்தர்கள் என்ற ரீதியில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்த நாட்டை பிரபகரனிடமிருந்து மீட்டெடுத்து இன்னொரு இஸ்லாமிய தீவிரத்தின் ;அழிவுக்கு விடப்போவதில்லையெனவும் கூறினார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *