Breaking
Tue. May 7th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஜெமீல் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி கொழும்பு -2 நவம் மாவத்தையில் உள்ள அரச வா்த்தக கூட்டுத்தாபணத்தின் தலைவராக கடமைகளை ஏற்றுக் கொண்டாா். இந் வைபவத்தில் அமைச்சா் றிஷாத், அமைச்சா் பைசா் முஸ்தபா, பிரதியமைச்சா் அமீா் அலி, மற்றும் அமைச்சின் அதிகாரிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
இந் நிறுவனம் பற்றி பொதுமுகாமையாளா் தெரிவிக்கையில்

இந் நிறுவனம் இலங்கையில் 8 வகையான இலக்ரோணிக் மற்றும் உள்ளுா் உற்பத்திகளை வெளிநாட்டு உற்பத்திகளையும் தமது வர்த்தக நிறுவனம் ஊடாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் ஒரே ஒரு அரச நிறுவனமாகும். அரசாங்க அமைச்சுக்களுக்கு மற்றம் அதிகார சபைகளது இலக்ரோணிக் பொருட்கள், ஸ்டேசனரி மற்றும் டயா் வகைகள் தளபாடங்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது. இதில் 60 வீதத்தை வெளிநாடுகளிலும் 40 வீதத்தை வா்த்தக நிறுவனமும் விற்பனை செய்கின்றது. இந் நிறுவனம் ஓர் இலாப மீட்டும் ஒரு நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் மெஹா விற்பனை நிலையம் ஒன்று நாரேகேண்பிட்டியவில் உள்ள மொத்த வா்த்தக சந்தையில் ஆரம்பிக்கபட்டு இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. அதனை திறப்பதற்கும் புதிய தலைவரும் அமைச்சரும் முன்வருதல் வேண்டும் என அதன் பொதுமுகாமையளாா் வேண்டிக் கொண்டாா். அத்துடன் 600 ஊழியா்கள் இங்கு கடமையாற்றுவதாகவும் சிலா் ஒப்பந்த அடிப்படையிலேயே கடந்த 3 வருடகாலமாக தொழில் செய்கின்றனா் அவா்களை நிரந்தரமாக்குவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கும்படியும் பொது முகாமையாளா் வேண்டிக் கொண்டாா்.

இங்கு உரையாற்றிய புதிய தலைவா் ஜெமீல்

என்னை இந்த நிறுவனத்துக்கு தலைவராக நியமித்தமைக்கு அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஊழியா்கள் இந் நிறுவனத்தை கட்டி எழுப்புவதற்கும் இலாப மீட்டும் ஒரு அரச நிறுவனமாகவும் புதிய நவீன முறைகளை கையாண்டு முன்னேற்றுவதற்கும் தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக் கொண்டாா்.

இங்கு உரையாற்றிய அமைச்சா் றிஷாத் – தனது அமைச்சின் கீழ் உள்ள 35 நிறுவனங்களுக்குள் இந் நிறுவனம் இந்த நாட்டில் உள்ள ஒரே ஒரு அரச வா்த்தக நிறுவனமாகும். இந் நிறுவனத்தின் ஒரு தொகுதி ஊழியா்களுக்கு அண்மையில் நிரந்தர நியமனம் தன்னால் வழங்கப்பட்டது. அத்துடன் மிகுதி ஊழியா்களையும் நிரந்தரமாக்குவதற்கு வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தலைவா் ஜெமிலுக்கு சகல ஒத்துழைப்பை வழங்குமாறும் வேண்டிக் கொண்டாா்.

SAMSUNG CSC

SAMSUNG CSC SAMSUNG CSC

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *