Breaking
Sun. May 5th, 2024
(அஷ்ரப் ஏ.  சமத்)
நேற்றிரவு பதுளை தியாத்தலாவையில் இரட்டை இலை கட்சியான ஜனநாயக ஜக்கிய முன்ணனியின் இறுதிக் கூட்டம் நடைபெற்றது.  அமைச்சர் றிசாத்பதியுத்தீன், வை.எல்.எஸ் ஹமீட், பாரளுமன்ற உறுப்பிணர் ஹசன் அலி அஸ்லம் ஹாஜி, நிசாம் காரியப்பர், மாகாணசபை உறுப்பினர் சுபைர், நவாஸ் முஸ்தபா, மற்றும் முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்களர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுத்தீன்,
பதுளை மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இரண்டு கட்சியும் இணைந்து இரட்டை இலையில் ஆகக் குறைந்தது ஒர் ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த இரண்டு கட்சியின் ஜக்கியத்தை இந்த நாட்டின் சகல அரசியல் மற்றும் அமைப்புக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த கட்சிகளின்  தலைவிதியை இந்த பதுளை மக்கள் முற்றாக மாற்றுதல் வேண்டும்.  எங்களது காலத்தையும் நேரத்தையும் இரண்டு கட்சிகளின் அரசியல் உறுப்பிணர்கள் இங்கு கடந்த ஒரு மாத காலமாக தங்கியிருந்து எடுக்கும் முயற்சிக்கு நீங்கள் நன்றியுடையவர்களக இருக்க வேண்டும்   உலமாக்களும், புத்திஜீவிகள், மற்றும் சூறா கவுன்சில் ஆகியோர்கள் இணைந்து ஊவாவில் இணைந்து செல்லுங்கள் என்று கொள்ளுப்பிட்டி பள்ளியிலும் அதன் பின் சகோதரர் ஹக்கீமீன் வீட்டிலும் 3 முறை சந்தித்து எடுத்த முயற்சியை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.
பதுளை மாவட்டத்தில் வாழும் மக்கள் பல  தசாப்தங்களாக அரசியல் தலைமைத்துவம் அற்ற ஆனாதைகளாகவும்; மிகவும் கஸ்டத்தியிலும் வறுமைக் கோட்டிலும் வாழ்ந்து வருகின்றீர்கள். இங்கு வாழ்கின்ற முஸ்லீம்களது பிரதேசங்களிலும் எந்த அடிப்படை வசதியிமின்றி மிகவும் கஸ்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை நேரடியாகக் காணக்கூடியதாக இருந்தது. இ ங்கு ஒரு பாடசாலையில் கடந்த 60 வருடமாக ஒரு முஸ்லீம் மாணவன் மட்டுமே க.பொ.சா.தரம் சித்தியடைந்துள்ளான். புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை வரலாற்றிலேயே 5 பேர் சிந்தியடைந்துள்ளார்கள் கல்வித்தரம் மிகவும் பின்னடைந்துள்ளது.  கடந்த 3 தசாப்தங்களாக தமது வீடுகளுக்கான மல சல கூடத்தைக் கூட கட்டிக் கொள்ளத முடியாமல் உள்ளோம். ஏனைய சமுகங்களுக்கு அரசாங்கமே வீட்டுத்தகரம் குடி நீர் பாடசாலைகள் மல சல கூட  கட்டுமாணங்கள வழங்கப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லீம் சமுகத்திற்கு எதுவேமே கிடைக்கவில்லை. குடிநீர் இல்லாது மலைகளிழும,; மடுக்களில் பெண்கள்  பல மைல்கள் தூரம் ஏறிச் சென்று தண்னீர் குடத்தை  சுமந்து வந்து நீரைப் பாவிக்கின்றார்கள். 4 ஏக்கரில் 90 குடும்பங்கள் மிகவும் நெருக்கமாகவும் சிறிய குடிசைகள் அமைத்த வாழ்கின்றீர்கள். அரசாங்கம் ஏனைய சமுத்திற்கு கிடைத்த அபிவிருத்திகள் நமது சமுகத்திற்கு கிடைக்க வில்லை. ஆகக் குறைந்தது நமக்கென ஒரு பிரச்சினையும் வரம்போது பொலிசில் சென்று ஒரு முறைப்பாட்டைக்கூட பதி அச்சமுள்ளவராக நீங்கள் வாழ்ந்து வருகின்றீர்கள்.
இதற்கெல்லாம் முதன்மைக்காரணம் கடந்த காலத்தில் நாம் யானைக்கும் வெற்றிலைக்கும் வாக்களித்து மற்றைய சமுகத்தினரது உருப்பிணருக்கு ஜயவே கூறி வந்துள்ளோம். நமது அண்றாட அழுவல்களை முடிப்பதற்கு முடியாமலும் ஒரு விஞ்ஞான ஆசிரியரை நமது பாடசாலைக்கு பெறமுடியாமல் உள்ளோம். மற்றைய சமுகத்திற்கு தமிழ் கல்வியமைச்சரையே இந்த அரசு வழங்கியிருக்கின்றது. அவர்கள் ஒன்றுசேர்ந்து தமது வாக்குபலத்தை காட்டியிருக்கின்றார்கள். நாம் யானைக்கும் வெற்றிலைக்கும்  வாக்களித்து வந்துள்ளோம். இதற்கு முதல் காரணம் நாம் தமக்கென்று ஒரு முஸ்லீம் உறுப்பிணரை பெற்றுக்கொள்ளாமையே க்காரணமாகும்.
ஆகவேதான்  இச் சர்ந்தர்ப்பத்தை மிகவும் அல்லாஹ் வழங்கிய ஒரு சர்ந்தப்பமாக நினைத்து இதில் இருந்து விலகி இருக்கும் ஏனைய சகோதரர்களையும் அனுகி  அவர்களையும் உள்வாங்கினால் நிச்சயமாக 2 உறுப்பிணர்களை பெற்றுக் கொள்ள முடியும்.
30 ஆயிரம் வாக்குகளில் ஆகக் குறைந்தது ஒரு உறுப்பினரையாவாது பெருவதற்கு 15ஆயிரம் வாக்குகளையாவது நீங்கள் இந்த இரட்டை இலைக்கு வாக்களிக்க   வேண்டும்.
நாங்கள் ஒருபோதும் அரசிற்கு சோரம்போகுவதற்காக இந்தக் உறுப்பிணரை தெரிபுசெய்யவில்லை. பதுளையில் உள்ள உலமாக்கள் மத்தியில் இந்த  உறுப்பி;ணர்கள் சத்தியம் செய்துள்ளனர்.  இன்சா அல்லாஹ் 1 உறுப்பிணராவது தெரிபுசெய்யப்பட்டால் ;அந்த உறுப்பிணரை நடவடிக்கை அவரது சகல செயற்பாடுகளளையும் பதுளை மாவட்ட உலமாக்களே முடிபு எடுப்பார்கள். இதில்  முஸ்லீம் காங்கிரசோ அகில இலங்கை மக்கள் காங்கிரசோ தீர்மாணம் எடுப்பதில்லை. உங்களுக்கென ஒரு முஸ்லீம் அரசியல் அதிகாரத்தை பெற்று அவர் ஊடாக உங்கள்பகுதிக்கு எங்கலாள் என்ன உதபிகளை ஆலோசனைகளைச் செய்யமுடியுமோ அத்தனையும் நாம் செய்வோம். என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
பாரளுமன்ற உறுப்பிணர் ஹசன் அலி –
பதுளை மாவட்ட இரட்டை இலையில் முஸ்லீம் உறுப்பிணர்களை தெரிபுசெய்து பதுளை கச்சேரியில் தாக்க செய்ய தயராக இருந்தபோது வை.எல்.எஸ் ஹமீட்டுக்கு ஓரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவர்கள.;  ஹமீட் அந்த போனுக்கு பதில் அளியுங்கள் என்று என்ணிடம் அந்த தொலைபேசி அழைப்பைத் தந்தார். அதில் அரசாங்கத்தின்  சார்பில் பிரபல நகர சபை வாக்கு எடுத்த 3 பேர் உள்ளனர். அவர்களை உங்கள் கட்சியில் போட்டுக்கொள்ளுங்கள் என்று சுசில்  சொன்னார். நான் சொன்னேன் அப்படி செய்யமுடியாது. இந்த கட்சி வேற்பாளர்களை  தயாரித்தது இந்த பிரதேச உலமாக்கள், மௌலவிமார்களும். அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என சொல்லி தடுத்தோம். என கூறினார்கள்.
நீங்கள் ஒற்றுமையாக வாருங்கள் என்று சொன்னீர்கள், ஒருமேடையில் 2 தலைவரும் வரவேண்டும் சொன்னீர்கள், அதன் பிறகு உலமாக்கள் முன் சகல வேற்பாளர்களும் சத்தியம் செய்து கையொப்பமிட வேண்டும் சொன்னீர்கள் அத்தனையும் நாங்கள் செய்துள்ளோம். இதன்பிறகு இந்தப்பிரதேச மக்களின் கைகளிலேயே முடிபு உள்ளது. எனக் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *