Breaking
Wed. May 8th, 2024

இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2 அல்லது 3 காதி நீதிமன்றங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் சாரி சாரியாக இன்று இணைந்து கொண்டிருப்பது மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் சேர் அவர்களின் அரசியல் விழுதாக செயற்படும் அமைச்சரும்,எமது கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீனின் அரசியல் செயற்பாடுகளை கண்டு என்றும் கூறினார்.

கொழும்பில் இடம் பெற்ற கிழக்கு மாகாணத்தில் நெசவு பயிற்சி நெறியினை நிறைவு செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மாகாண சபை உறுப்பினர் சுபைர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் –

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களது உரிமகளையும்,அவர்களது பாதுகாப்பினையும் கவனத்திற் கொண்டு தான் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறுபட்ட அபிவிருத்திகளை கொண்டு வந்து குவித்தார்.ஆனால் அவரின் மறைவுக்கு பின்னர் இன்று இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் காதி நிதிமன்றங்களை அமைக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளதை இங்கு கூறியாக வேண்டும்.

கிழக்கில் முஸ்லிம் மக்களது பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.அதனை அவர்கள் மற்நது கிழக்கு மாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பழிவாங்கும் செயற்பாடுகளை அரங்கேற்றிவருகின்றனர்.

இவர்கள் எதை செய்தாலும் எமது கட்சியின் தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் மூலமாக இந்த மக்களுக்கு பல பணிகளை ஆற்றியுள்ளோம்.மறைந்த தலைவர் அஸ்ரப்  விட்டுச் சென்றதை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்துவருகின்றார்.

இன்று அம்பாறை மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதான தளத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றார்கள் என்றும் கிழைக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *