Breaking
Mon. Apr 29th, 2024

எம்.ரீ.எம்.பாரிஸ்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை முறையிலான பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் வாகரை வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எச்.ஆர். ராகுலநாயகி அவர்களின் வழிகாட்டலில் வேள்ட் விசன் லங்கா நிறுவனத்தின் வாகரை பிராத்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புனானை கிழக்கு குகனேசபுரம், கேனிநகர் பிரதேசத்தில் கெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு இஞ்சி, மஞ்சல் பயிர் செய்கை செய்வதற்கான தொழில்நுட்ப விவசாய பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

முதல் தடைவையாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இப் பயிர் செய்கை விவசாயிகளுக்கு வெற்றியளித்துள்ளது.

முதல் கட்டமாக 50 பைகளில் நடப்பட்ட இஞ்சி, மஞ்சல் செய்கை மூலம் இவ்விவசாயிகள் பை ஒன்றிற்கு 750 தொடக்கம் 2000 கிராம் நிறையுடைய இஞ்சி கிழங்கினை பெறுகின்றனர். இதன் மூலம் தலா 500 தொடக்கம் 1200 ரூபாய் வரை வருமானம் ஈட்டிகொள்கின்றனர்.

50 பேக் இஞ்சி செய்கை மூலம் 50 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக வருமானத்தை இவர்கள் பெற முடியும் என விவசாய தொழில்நுட்ப நிபுனர் ஏகனாயக கருத்து தெரிவித்தார். இப் பயிர் செய்கை செய்வதற்கு ஒரு பை ஒன்றிற்கு 100 ரூபாய் மாத்திரமே மூலதன செலவாக செலவிடப்படுகின்றது.

இதன் அறுவடை செய்யும் நிகழ்வு புனானை கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கோபல கிரிஸ்னன் தலைமையில் குகனேசபுரம் கிராமத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வேள்ட் விசன் நிறுவனத்தின் வாகரை பிராத்திய நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திருமதி ஜெகதீஸ்வரி குணசிங்கம், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.கஜேந்திரன், டெக்னே எக்ஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் தனபால, நிறுவனத்தின் விவசாய தொழில்நுட்ப நிபுனர் ஏகனாயக உள்ளிட்ட அதிகாரிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *