Breaking
Sat. May 18th, 2024

அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய்­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார தி­ஸா­நா­யக்க.

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை மஹிந்த அணி யின் மக்­களை ஏமாற்றும் பித்­த­லாட்டம் என்றும் அவர் தெரி­வித்தார்.

பெல்­வத்­தையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற
ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே ஜே.வி.பி. தலை­வரும் எம்­பி­யு­மான அநுர திஸா­நா­யக இவ்­வாறு தெர­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அன்று தனக்கு நியா­ய­மாக கிடைக்க வேண்­டிய பிர­தமர் பத­வியை கேட்டு அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சுற்றி வந்தார்.

ஆனால் அப்­ப­தவி மைத்­தி­ரிக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.
இன்று பொதுத்­தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சந்­தர்ப்பம் கேட்டு மஹிந்த ராஜ­பக்ஷ – மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுற்றி வரு­கிறார்.

இத­னைத்தான் விதியின் விளை­யாட்டு என்­பது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இன்று முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ள­தோடு மஹிந்த அணி மைத்­திரி அணி என இரண்­டாக பிள­வு­பட்­டுள்­ளது.

குரு­நா­க­லையில் இடம்­பெற்ற மஹிந்த அணி கூட்­டத்தில் 30 பேருக்கும் குறை­வான எம்.பி. மாரே கலந்து கொண்­டனர்.
கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சர்­வா­தி­கார தோல்வி கண்­டாலும் மஹிந்­தவின் அணி தோல்வி காண­வில்லை. அந்த அணிதான் இன்று ஆட்டம் போடு­கி­றது.

எனவே பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்­தினால் இந்த அணியின் ஆட்டம் அடங்கி விடும்.
ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை கொண்டு வரப்­போ­வ­தாக கூறும் மஹிந்த அணியின் கருத்­துக்கள் மக்­களை ஏமாற்றும் பித்­தா­லாட்டம் ஆகும்.
ஏற்­க­னவே ஜோன் அம­ர­துங்க ரவிகருணாநாயகவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணைகள் கொண்டு வருவதாக கூறினார்.

அதெல்லாம் எங்கே போனது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.

அத்துடன் மஹிந்த ராஜபக் ஷ, பந்­துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ ஆகியோருக்கு அன்று கசப்­பாகக் காணப்பட்ட ஜெனீவா இன்று இனிப்­பாக மாறி விட்­டது என்­பது வேடிக்­கை­யா­க­வுள்­ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸா­ நா­யக்க எம்.பி. தெரிவித்தார்.

மேலும் திரு­டர்­களை பாது­காப்­பது சர்­வ­தேச பாரா­ளு­மன்ற சங்­கத்தின் கட­மை­யல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்­களில் ஜெனீவா என்ற வார்த்­தையை கூறு­கையில், மஹிந்த ராஜபக் ஷ, பந்­துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ கூட்­ட­ணிக்கு கசக்கும்.

ஜெனீவா என்­றாலே அது தடை செய்­யப்­பட்ட வார்த்­தை­யாக இருந்­தது.

இன்று அது அவர்­க­ளுக்கு இனிப்­பாக மாறி­யுள்­ளது. சர்­வ­தேச பாரா­ளு­மன்ற சங்­க­மா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உரி­மைகள் மறுக்­கப்­படும் போதும் அவர்கள் தாக்­கப்­ப­டும்­போதும் அவர்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் எம்.பி.க்களின் உரி­மை­களை பாது­காக்கும் சங்­க­மாகும்.
அதுதான் அச் சங்­கத்தின் கட­மை­யாகும்.

அதைவிடுத்து ஊழல் மோச­டி­களில் ஈடு­படும் திருட்டு எம்.பி.க்களைப் பாது­காப் பது இச் சங்­கத்தின் கட­மை­யல்ல.
எமது நாட்டில் முன்­னைய காலங்­களில் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு, போதை­வஸ்து தடுப்பு பிரி­வுகள் இயங்­க­வில்லை.

ஆனால் காலப்­போக்கில் நாட்டில் பயங்­க­ர­வாத போதைப்­பொருள் பிரச்­சி­னைகள் தலை­தூக்கும் போது மேற்­கண்ட விசேட பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

அதே­போன்று தான் பாரிய ஊழல் மோசடி களை ஆராய விசேட நிதிக்குற்றவியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *