Breaking
Fri. May 17th, 2024

நேற்றையதினம் மன்னார் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட அளக்கட்டு கிராமத்தில் மீள் குடியேறிய  மக்களுடனான சந்திப்பு  நிகழ்வு ஒன்று இடம்பெற்றது  இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது முன்னாள் முசலி பிரதேச சபை வேட்பாளர் ரிபாயி தலைமையில் அமைச்சர் அவர்களின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது

இதன்போது மக்கள் முன் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் ” இந்த கிராமமானது அமைச்சர் அவர்களின் முழுமையான முயட்சியினால் மீள் குடியேற்றப்பட்ட ஒரு கிராமமாகும் இந்த கிராமத்தில் இடம்பெறும் ஒவ்வொரு அபிவிருத்தி திட்டங்களும் அமைச்சரினால் செய்யப்பட்டவை அது வீடாக இருக்கட்டும் பாடசாலையாக இருக்கட்டும் அல்லது பாதைகளாக இருக்கட்டும் அனைத்தும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களினால் கொண்டுவரப்பட்டது என்பது ஒருபோதும் யாராலும் மறுக்க முடியாது நீங்கள் சிந்திக்க வேண்டும் இதுவரை அமைச்சர் யாரிடமும் இனம் மதம் மொழி பேதம் பார்த்து சேவை செய்தாரா என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உண்மையில் நாங்கள் அவ்வாறு இனம் மதம் பார்த்து வேலை செய்பவர்கள் அல்ல நாங்கள் இந்த பதவிகளில் இருக்கும் வரை நாங்கள் உயிருடன் இருக்கும் வரை யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்கள் அது முஸ்லிமாக இருந்தாலும் சரி தமிழராக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் மனிதன் என்ற அடிப்படையில் நாங்கள் எமது சேவைகளை அனைவருக்கு செய்து கொண்டுதான் இருக்கின்றோம் ” என தெரிவித்தார்_BC_3943 _BC_3946

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *