Breaking
Tue. Apr 30th, 2024

சமுக வலைத்தளங்களில் வெளியானது போன்று டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் பூமி இருளாக காணப்படும் என்ற செய்தி வதந்தியென நாசா அறிவித்துள்ளது.

அண்மையில் சமுக வலைத்தளங்களில் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக வெளியாகிய வதந்திச் செய்தியில் :-

“சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில்மூழ்கும்.  சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல்வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்  பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அத்தகைய பயங்கர சூரியமண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது. டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில்இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என்று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல்வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பி விடும்.

தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக் கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்து விடும்.  எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரிய மண்டல புயலால் ஏற்படும் தூசி, துகள்கள் 220 மணி நேரத்துக்கு வானத்தை அடைத்து விட்டது போல மாற்றி விடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது” என்று பரப்பி வருகின்றார்கள்.

ஆனால் இது முழுக்க முழுக்க வெறும் வதந்தி என்று நாசா தெரிவித்துள்ளது.
சூரியனில் அதுபோன்ற புயல்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், தூசி, துகள்கள் போன்றவை ஒளியை மறைக்கும் அளவுக்கு வியாபிக்க வாய்ப்பில்லை.

இப்புயல்களால் மிகச்சிறிய அளவிலான பாதிப்புகளே ஏற்படும்.  மேலும், இவ்வதந்திச் செய்திகளால் யாரும் பயப்படவோ, பதட்டமடையவோ தேவையில்லை. இதுமுழுவதுமாக கற்பனையான செய்திதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.  (O)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *