Breaking
Sat. May 18th, 2024

கடல்வளம் குறித்து ஆய்வொன்றை முன்னெடுத்து 2018ஆம் ஆண்டளவில் பாரிய அளவிலான கடல் தொழில் தகவல்கட்டமைப்பு தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த  – நீல பச்சை சகாப்த மாநாடு ( ‘ Sri Lanka NEXT – Blue Green Era conference’)  என்ற தலைப்பில்மாகாநாடொன்றை நடத்துவதற்கானஎ ஏற்பாடுகளையும் இலங்கை  மேற்கொணடுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.

எங்கள் சமுத்திர மாநாடு 2016 என்ற மாநாட்டில் உலையாற்றுகையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயங்களைகுறிப்பிட்டார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையில் இந்த மாநாடு செப்டம்பர் 15 ஆம் திகதி தொடக்கம்16ஆம் திகதி வரையில் நடைபெற்றது.அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா சமூக பொது மற்றும் தனியார் துறை மற்றும் இளைஞர்தலைவர்கள் அடங்களாக சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க இராஐhங்க செயலாளர்இதனை ஆரம்பித்து வைத்தார்.அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்றினர்.  அமெரிக்க இராஐhங்க திணைக்களசெயலாளர் ஜோன் கெரியின் அழைப்பின் பேரில் அமைச்சர் மங்கள சமரவீர இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 9 கடல் பாதுகாப்பு பகுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையைசுற்றியுள்ள கடல் மற்றும் கடலுக்கு அப்பாலுள்ள சமுத்திரத்தையும் பாதுகாப்பதற்காக பல வேலைத் திட்டங்களை அரசாங்கம்நடைமுறைப்படுத்தியுள்ளது. இலங்கையில் சுற்றாடல்துறை அமைச்சு ஜனாதிபதியின் கீழ் செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதிசுற்றாடல்துறை பாதுகாப்பில் கூடுதலான அக்கறையை கொண்டிருப்பதால் அவருக்கு இந்த அமைச்சுப் பொறுப்புவழங்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையில் உலகிலேயே முக்கியமான தொல்பொருள் அரும்பொருள்காட்சி நிலையம் ஒன்றுதிறந்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் இம்மாதம் 13 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரையில் கரையோர தேசிய மற்றும்கடல்வளத்தை பாதுகாப்பதற்கான வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடல் உயிரினங்கள் மற்றும் வளங்களின்பாதுகாப்புக்காக புதிய பிரதேசங்கள் பல கடல் பாதுகாப்பு பிரதேசமாக விரைவில் பிரகடனப்படுத்தப்படவுள்ளன. இதேபோன்றுஇலங்கை இவ்வருட இறுதிக்குள் கடல் ஆமை பாதுகாப்பு தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.காயங்களுக்குள்ளாகும் ஆமைகளுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், இவற்றுக்கு பாதுகாப்பான இடங்கள் தொடர்பிலும்,அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. இவற்றுககென அமைக்கப்படும் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்குதகவல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *