Breaking
Sun. May 19th, 2024

இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதன் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில்  ஆரம்­ப­மா­னது. அதில் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நிதி அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாடுகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆண­யைா­ளரின் மதிப்பீடுகளை பார்க்­கின்றோம். இதற்­காக அவ­ருக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். மேலும்  இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். அவர் அறிக்­கையை முன்­வைத்த பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்றார்.

நேற்று ஆரம்­ப­மான கூட்டத் தொடர் எதிர்­வரும் ஜூலை மாதம் முதலாம் ஆம் திகதி வரை நடைபெறும். எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை வெளியிடப்படும்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *