Breaking
Sun. May 19th, 2024

இலங்­கையின் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை வெளி­யிடும் விசா­ரணை அறிக்கை இலங்கை இரா­ணு­வத்தை பழி­தீர்க்கும் வகையில் அமையும். அதேபோல் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என நம்­பு­வ­தாக தூய்மையான ஹெல உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தை சர்­வ­தேச அரங்கில் தீர்க்க முயற்­சிப்­பது ஏன்? தமிழர் பிரச்­சி­னைக்கு புதிய அர­சியல் அமைப்பு எதற்­காக? இப்­போ­தி­ருக்கும் அர­சியல் அமைப்பின் மூலம் தீர்க்க முடி­யாத தமிழ் மக்­களின் பிரச்­சினை என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

தூய்மையான ஹெல உறு­மைய கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­ற­போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் இப்­போது ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. இதில் மிகவும் பயங்­க­ர­மான சம்­ப­வங்கள் நடந்­தே­றி­யுள்­ளன. அதா­வது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­று­கையில் நாட்­டுக்கு அச்­சு­றுத்­த­லான விட­யங்­களை தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கப் போவ­தாக அவர் தெரி­வித்­துள்ளார். ஆனால் தேர்தல் காலத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விக்­கையில் 13ஆம் அர­சியல் அமைப்­பி­னுலுள்ளேயே தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை தேடு­வ­தாக தெரி­வித்தார்.

ஆனால் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இப்­போது தெரி­வித்­தி­ருக்கும் கருத்து பிர­தமர் ரணிலின் கருத்­துக்கு முற்­றிலும் முர­ணாகவுள்ளது. ஆகவே மங்­கள சம­ர­வீர இலங்­கைக்கு வந்­த­வுடன் பாரா­ளு­மன்­றத்­துக்கும் நாட்­டுக்கும் விளக்கமளிக்க வேண்டும். அதேபோல் இப்­போ­தி­ருக்கும் அர­சியல் அமைப்பில் தீர்க்க முடி­யாத தமிழ் மக்­களின் பிரச்­சினை என்ன, புதிய அர­சியல் அமைப்பில் அதை எவ்­வாறு தீர்க்­கப்­போ­கின்­றீர்கள் என்­பதை தெளி­வாக குறிப்­பிட வேண்டும்.

அதேபோல் இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர்பில் தலை­யிட சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கு பொறுப்பு உள்­ளது.ஏனெனில் மனித உரி­மைகள் தொடர்பில் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களில் இலங்­கையும் கைச்­சாத்­திட்­டுள்­ளதால் அவற்றை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஆனால் அதி­காரப் பகிர்வு தொடர்பில் ஆலோ­ச­னை­களை பெறவோ அதி­காரப் பகிர்வை மேற்­கொள்­ளவோ எந்­த­வொரு சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­யிலும் இலங்கை கைச்­சாத்­தி­ட­வில்லை.

அதேபோல் இலங்­கையில் அதி­காரப் பகிர்வை மேற்­கொள்ள சர்­வ­தே­சத்­துக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை. அவ்­வாறு இருக்­கையில் அதி­கா­ரப்­ப­கிர்வை மேற்­கொள்­வ­தாக சர்­வ­தேச தரப்­பிடம் தெரி­விக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை.

இலங்­கையில் உள்­நாட்டு பிரச்­சி­னையை சர்­வ­தேச அரங்­கிற்கு கொண்­டு­செல்­வது ஏன். நாளை (இன்று ) வெளி­வ­ர­வி­ருக்கும் ஜெனிவா அறிக்கை மிகவும் பயங்­க­ர­மா­ன­தாகும். எமது இரா­ணு­வத்தை தண்­டிக்கும் வகையில் ஏதேனும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டலாம் என்ற சந்­தேகம் எமக்கு உள்­ளது. அவ்­வாறு ஏதும் சம்­ப­வங்கள் நடை­பெ­று­மாயின் எமது இரா­ணு­வத்தை காப்­பாற்றும் வகையில் “பொறுப்பு துறப்பு” சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வர தீர்­மா­னித்­துள்ளோம்.இந்த சட்­ட­மூலம் ஒன்றும் புதிய விடயம் அல்ல.

மூன்று சந்­தர்ப்­பங்­களில் நாம் இந்த சட்­ட­மூ­லத்தை பயன்­ப­டுத்­தி­யுள்ளோம். 1815ஆம் ஆண்டு சிங்­கள முஸ்லிம் கல­வ­ரத்தின் போது முதலில் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன் பின்னர் 1977 இல் நடை­பெற்ற கல­வ­ரத்தின் போது குழப்­பங்­களை தடுக்க அர­ச­த­ரப்பு ஏதேனும் தவ­றுகள் செய்­தி­ருந்தால் அதில் இருந்து பாது­காப்பு படை­யி­னரை காப்­பாற்­றவும் 1978 இல் ஜே.வீ.பி கல­வ­ரத்தின் போதும் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

ஆகவே வெளிவரவிருக்கும் அறிக்கையில் இராணுவத்தை தண்டிக்கும் வகையில் ஏதேனும் விடயங்கள் முன்வைக்கப்படுமாயின் எமது இராணுவத்தை காப்பாற்ற இம்முறையும் பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை கொண்டுவருவோம். எமது உயிரை காப்பாற்றிய இராணுவ வீரர்களை காப்பாற்ற எம்மாலான சகல முயற்சிகளையும் கையாள்வோம் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *